ராகவேந்திராவிடம் நான் பட்ட பாடு -ஸ்னேகா!

Tuesday, 18 August 2009

[ Tuesday, 18 August 2009, 11:34.12 AM GMT +05:30 ]
கடந்த 6 மாதங்களாக எஸ்எம்எஸ் மூலம் ஸ்னேகாவுக்கு காதல் வலை விரித்து, தொடர்ந்து தொல்லை தந்து இப்போது கைதாகி சிறைக்குச் சென்றுள்ள பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா தன்னை ஒரு படத் தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்டு ஸ்னேகாவின் தந்தையை ஏமாற்றப் பார்த்துள்ளார்.
இது குறித்து ஸ்னேகா அளித்துள்ள பேட்டியில்,

ராகவேந்திரா முதலில் எங்கள் வீட்டுக்கு வந்து தன்னை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆட்டோகிராப் பாகம்-2 என்ற படத்தை கன்னட மொழியில் எடுக்கப் போவதாகவும், அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் என் அப்பாவிடம் கூறினார்.

அதுபற்றி முதலில் டைரக்டர் சேரனிடம் போய் பேசுமாறு என் தந்தை அவரிடம் கூறி அனுப்பினார். இதையடுத்து டைரக்டர் சேரன் என் அப்பாவை தொடர்பு கொண்டு, ராகவேந்திரா படம் எடுக்க வந்தவர் போல் இல்லை. மோசடி பேர்வழி போல தெரிகிறார் என்றார்.

அதன்பிறகு சில நாட்களில் ராகவேந்திரா என்னை சந்தித்தார். அப்போது, நான் உன்னை வைத்து படம் எடுப்பதற்காக சென்னை வரவில்லை. என்னிடம் ரூ.5,000 கோடி சொத்து உள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்காகத்தான் படத் தயாரிப்பாளர் போல வந்தேன் என்றார்.

அதற்கு, நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்று கூறிவிட்டேன்.

இதையடுத்து எனக்கு காதல் எஸ்.எம்.எஸ்களை அனுப்ப ஆரம்பித்தார். நான் எந்த எஸ்எம்எஸ்சுக்கும் பதில் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, உன் முகத்தில் ஆசிட் ஊற்றி கோரமாக்கி விடுவேன் என்று மிரட்டினார்.

பின்னர் ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப ஆரம்பித்தார். தினமும் 250 மிஸ்டு கால்கள், எஸ்.எம்.எஸ்கள் என்று தொல்லை அநியாயத்துக்கு இருந்தது. செல்போனை சுவிச் ஆப் செய்து மறுபடியும் ஆன் செய்தால் அடுத்து நிமிடமே லைனுக்கு வந்து, எனக்கு பயந்து செல்போனை சுவிச் ஆப் செய்து விட்டாயா? என்று மிரட்டுவார்.

அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க 3 முறை செல்போன் எண்களை மாற்றினேன். ஆனாலும் புது நம்பரை எப்படியாவது கண்டுபிடித்து லைனுக்கு வந்து விடுவார்.

நாளடைவில் நேராக நான் நடித்து கொண்டிருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து தொல்லை தர ஆரம்பித்தார்.

என் பிறந்தநாளன்று பூச்செண்டு அனுப்பினார். அதை தூக்கி வீட்டிற்கு வெளியே போட்டால் அதையும் கண்டுபிடித்து, நான் அனுப்பிய பூச்செண்டை வெளியே எரிந்து விட்டாயா? என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

கிட்டத்தட்ட ஒரு சைக்கோ மாதிரி டார்ச்சர் தந்ததால் போலீசில் புகார் செய்வேன் என்றேன். எனக்கு எல்லா போலீஸ் அதிகாரிகளையும் தெரியும், யாருக்கும் பயப்பட் மாட்டேன் என்றார்.

பொறுமை இழந்து போனதால் தான் போலீசில் புகார் தந்தேன் என்று கூறியுள்ளார்.

கைதான ராகவேந்திரா பெங்களூர் எலஹகங்கா பகுதியைச் சேர்ந்தவர். 35 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

போலீசிடம் அவர் அளித்தள்ள வாக்குமூலத்தில்,

ரியல் எஸ்டேட் தொழில் மூலம் தமிழ் திரைப்பட நடிகர்கள் சிலருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. சினிமாவில் பார்த்த நடிகை ஸ்னேகாவின் சிரிப்பும், உடல் அமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடன் கனவுலகில் வாழ்ந்தேன். ஸ்னேகா இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஸ்னேகாவை இப்போதும் காதலிக்கிறேன். அவரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன். எனது காதலை அவர் நிச்சயம் புரிந்து கொள்வார் என்று கூறியுள்ளாராம்.

Comments

No response to “ராகவேந்திராவிடம் நான் பட்ட பாடு -ஸ்னேகா!”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment