இதயத்தைக் காக்க......

Wednesday, 19 August 2009



நல்ல இரத்தத்தை உடலின் மற்ற உறுப்புக்களுக்கு அனுப்ப உதவுகிறது இதயம்.அந்த இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள 5 வழிமுறைகள். புகையிலைப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.புகைப்பிடிக்கக்குடது.உடலில் வியர்வை வெளிப்படுமளவு எதாவது ஒரு வேலை செய்வது நல்லது.அப்போதுதான் உடலில் அதிகப்படியாகப் படியும் கொழுப்புக் கரையும்.வீட்டுப் பராமரிப்பு வேலைகள் செய்வது,தோட்ட வேலைகள் பார்ப்பது,செல்லப் பிராணிகளோடு வாக்கின் போவது கூட சுறுசுறுப்பான வேலைதான்.சத்தான உணவு,கொழுப்புச் சத்தில்லாத உணவுகளை உண்ண வேண்டும்.பழங்கள் பச்சை காய்கறிகள்,பழங்கள் சேர்த்துக் கொள்வது அவசியம்.
உடல் எடையை எந்தளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர்களோ,அந்த அளவு இதய நோய்கள் உங்களை விட்டு விலகிச் செல்லும்.அதிக உடல் எடை இதய நோய்கள் மட்டுமல்லாது அதிக இரத்த அழுத்தம்,சக்கரை நோய்,அதிக கொழுப்புப் போன்றவற்றுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும்.எனவே முறையான உடற்பயிற்சி தேவை.குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்த அழுத்தம்,சக்கரை அளவு,உடலில் உள்ள கொழுப்பின் அளவு ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

Comments

No response to “இதயத்தைக் காக்க......”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment