சச்சின் பற்றிய சிறு பார்வை.

Tuesday, 25 August 2009

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைசிறந்தஇந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.




சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாகடெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்துஅணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்களுக்கு மேல் குவித்த வீரராவார்.


துடுப்பாட்ட வகைவலதுகை
பந்துவீச்சு வகைவலதுகைகை கால் சுழற்பந்து
வலதுகைகை ஓவ் சுழற்பந்து
வலதுகைகை கால் மந்தகதி
தேர்வுஒ.ப.து
ஆட்டங்கள்146413
ஓட்டங்கள்11,78216,088
ஓட்ட சராசரி55.5743.95
100கள்/50கள்39/4941/87
அதிக ஓட்டங்கள்248*186*
பந்துவீச்சுகள்3,3307,709
இலக்குகள்42154
பந்துவீச்சு சராசரி52.6643.79
சுற்றில்
5 இலக்குகள்
02
ஆட்டத்தில்
10 இலக்குகள்
0பொருந்தாது
சிறந்த பந்துவீச்சு3/105/32
பிடிகள்/
ஸ்டம்பிங்குகள்
85/0120/0


Comments

No response to “சச்சின் பற்றிய சிறு பார்வை.”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment