விஜய் டிவியில் "மாயாஜாலம்"

Saturday, 22 August 2009


Image












விஜய் டிவியில் ஞாயிறு தோறும் மாயலோகம் என்னும்
மாயாஜாலத் தொடர் காலை 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிரபல மேஜிக் நிபுணரும் மேஜிக்கில் கின்னஸ் சாதனையாளருமான
டாக்டர் அலெக்சாண்டர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
பிரமிக்கவைக்கும் மாஜிக் வித்தைகளில்அசாத்திய சாதனை புரிந்த
இந்தியாவின் பல்வேறு தலைசிறந்த மேஜிக் கலைஞர்களை
விஜய் டி.வி.யின் மாயலோகம் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தி வருகிறது.
மேஜிக்கில் மாயாலாஜங்கள்இந்நிகழ்ச்சியில் தான் முதன் முதலில்
அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தலை சிறந்த
மேஜிக் கலைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த
விஜய் டிவி மேடை அமைத்து கொடுத்துள்ளது. அலெக்சாண்டர் கடந்த
15 ஆண்டுகளாக இந்த மேஜிக் கலையில் ஈடுபட்டு பல விருதுகள் பெற்றுள்ளார்.
2005-ம் ஆண்டில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக மாஜிக் செய்ததில்
இவர் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் 12 மணி நேரம் தொடர்ந்து மென்ட்டல் மேஜிக் செய்தற்காகவும்
இவரது பெயர் லிம்காவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மென்ட்டல்
மாஜிக் என்பது, ஒருவரின் மனதில் நினைத்திருப்பதை சரியாக யூகித்துச்
சொல்வதாகும். அலெக்ஸ்சாண்டருக்கு சிறந்த தந்திரக் காட்சி கலைஞருக்கான
`கலைமாமணி' விருதும் வழங்கப்பட்டது.இவர் தமிழ் திரைப்படங்களிலும்
தனது முத்திரையை பதித்துள்ளார். இந்தியாவைத் தவிர பல்வேறு நாடுகளிலும் தனது
மேஜிக் திறமையை நிரூபித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட மாஜிக் ஷோக்களை
இதுவரை இவர் செய்துள்ளார்.மாயலோகம் நிகழ்ச்சியில், மேடையில்
குதிரை, யானை, கார், பைக் ஆகியவை மறைந்து மீண்டும் தோன்றும்
மாயாஜாலம் செய்யவிருக்கிறார். மேலும் ஒரு பெண்ணின் உடலை
இரண்டாகப் பிளந்து மீண்டும் அதனை ஒன்றாக்கும் மாயாஜாலமும் இதில்
இடம் பெறுகிறது. இதைப் போன்ற மேஜிக் காட்சிகள்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது இதுவே முதல் முறை ஆகும்.

Comments

No response to “விஜய் டிவியில் "மாயாஜாலம்"”
Post a Comment | Post Comments (Atom)

Post a Comment