கிரிக்கெட் சரவேடித் திருவிழா.

Sunday, 23 August 2009

2007 மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடக்க இருப்பது 9வது உலகக் கோப்பை போட்டிகளாகும்.இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன(விரிவான தகவல்கள் விரைவில்) . இதற்கு முன் நடைபெற்ற எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மூன்று முறையும் (1987,1999,2003),மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறையும்(1975,1979),இந்தியா ஒரு முறையும்(1983),பாகிஸ்தான் ஒரு முறையும் (1992),இலங்கை ஒரு முறையும் (1996) வென்றுள்ளன.
இதுவரை எந்த ஒரு நாடும், தனது மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. (1996ல் இலங்கை வென்ற பொழுதும்,அம்முறை இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தின). உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிக முறை பங்கேற்றவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வாசிம் அக்ரம்.இவர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 38 (5 உலகக் கோப்பைகள்). இரண்டாவதாக வருபவர் இலங்கையைச் சேர்ந்த அரவிந்த டி சில்வா (35 போட்டிகள்,5 உலகக் கோப்பைகள்), மூன்றாவது இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத்(34 போட்டிகள், 4 உலகக் கோப்பைகள்). சச்சின் டெண்டுல்கர் இதுவரை 4 உலகக் கோப்பைகளிலும்,33 போட்டிகளிலும் விளையாடி,மியாண்டட்டுடனும் ஸ்டிவ் வாஹ்வுடனும் நாலாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார். 10வது உலகக் கோப்பை போட்டிகள் 2012ல் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளன. இதன் இரண்டு அரை இறுதி ஆட்டங்கள் முறையே கொழும்பு மற்றும் கராச்சியிலும், இறுதியாட்டம் மும்பையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பான்டிங், அரவிந்த டி சில்வா மூவரும் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் சதம் அடித்துள்ளனர். மூன்று முறையும் அவர்களது அணிகள் கோப்பையை வென்றன்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த பெருமைக்குரியவர் சச்சின் டெண்டுல்கர்(தல போல வருமா?). இவர் இதுவரை 33 போட்டிகளில் பங்கேற்று 1732 ரன்கள் குவித்துள்ளார்(சராசரி 59.72!). இதில் 4 சதமும், 12 அரை சதங்களும் அடங்கும். இவரின் அதிகபட்ச ரன் 152. இவருக்கு அடுத்து வருபவர் ஜாவெத் மியாண்டட்(33 போட்டிகள் 1083 ரன்கள் 1 சதம் 8 அரை சதம் அதிகபட்ச ரன் 103)


அதிக விக்கெட்டுகள் எடுத்த பெருமைக்குரியவர் வாசிம் அக்ரம். இவர் 38 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்து வீச்சு 5-28,சராசரி 23.80 எகானமி ரேட் 4.04. இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் 33 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Comments

2 Responses to “கிரிக்கெட் சரவேடித் திருவிழா.”
Post a Comment | Post Comments (Atom)

Chandru said...

//2007 மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடக்க இருப்பது 9வது உலகக் கோப்பை போட்டிகளாகும்.இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன//

யப்பா இப்போ ஆகஸ்ட் 2009.... இவ்வளவு நாள் தூக்கமா????

25 August 2009 at 08:33
vigna said...

முன்பு நடந்ததை மறக்கலாமா?

25 August 2009 at 21:27

Post a Comment