விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை கொண்டு சென்று திரும்பி பூமிக்கு வரும் வர்த்தகரீதியான விண்கப்பலை தயாரிக்கும் முயர்ச்சித் திட்டம் கடந்த நான்கு வருடங்களாக மொஜோவ வனத்தில் மறைந்திருந்தது,தற்ப்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறது .அதி இரகசியமாக மேற்க்கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் மூடுதினர் விலகி பொது மக்களுக்கும் விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்க்கொள்ளுதல் சத்தியம் எனும நம்பிக்கை பிறந்துள்ளது.இருப்பினும் மெஜோவ வனப்பகுதியில் ருத்தன் பரிசோதனைக் களத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உயிர்களைக்குடித்த பயங்கர விபத்தில் பின்,விண்வெளிக்குச் சென்று பூமியை சுற்றி வந்து உல்லாசப் பயணிகளை மகிழ்விப்பதர்க்காக
தயாரிக்கப்பட்ட விண்வெளிக்கப்பல் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.திருப்பவும் அவ்வகை விபத்து நிகழாத வண்ணம் சகல கருவிகளும் மறுசீரமைக்கப்பட்டன.விண்வெளிச் சுற்றுலா மிக விரைவில் அதி உச்ச நிலையை அடையும் என எதிர்பாக்கப்படுகிறது .சுமார் 250 விண்வெளி வீரர்களாக
பாவனை செய்ய விரும்பும் நபர்கள்,5 நிமிடங்கள் மட்டும் தமது உடல் நிறையை உணராது அந்தரத்தில் மிதக்கும் அனுபவத்தை உணர்வதற்கு 200,000, டொலர்கள் முற்ப்பணம் செலுத்தி தங்கள் வாய்ப்பிற்கு காத்திருக்கின்றனர்.இருப்பினும்,விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்க்கொள்ள மனுக்கொடுத்தவர்கள் எல்லோருக்கும் அந்த வாய்ப்புக்கிடைப்பதில்லை.அவர்கள் மிகக்கடுமையான பரிசோதனைகளில் தேற வேண்டும்.முதலாவதாக நோய்நோடியற்ற திடகாத்திரமானவர்களாக இருக்க வேண்டும்.திவிர மருத்துவப் பரிசோதனைகளில் தேற வேண்டும்.
தொடரும்.
Comments
No response to “விண்வெளிக்குச் சென்று வரலாமா?”
Post a Comment | Post Comments (Atom)
Post a Comment