தளம் மாற்றப்படுகிறது.
Thursday, 19 November 2009
சில இலவச வைத்தியம்.
Wednesday, 18 November 2009
வேப்ப மர வித்துக்களை உடைத்து உள்ளே உள்ள பருப்புக்களை மட்டும் எடுத்து,சுத்தமாய் அம்மியில் வைத்து,பசுப்பால் விட்டு மை போல அரைத்து இரண்டு மொச்சைக் கொட்டையளவு எடுத்து வில் போட்டு விழுங்கி விட வேண்டும்.இந்த விதமாக தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீண்ட காலமாக இருக்கும் மூலம் கரைந்து மூல நோய அடியோடு குணமாகும்.இந்த மருந்தை சாப்பிடும் போது அதிக காரம் சாப்பிடக்கூடாது.காரம் தேவையானால் மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.மோர்,தயிர்,பால் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பாகற்காய் சேர்க்கக் கூடாது.ஏழு நாட்களில் சுகம் தெரியும்.
இருதயப் படபடப்பு குணமாக
ஒரு சிலருக்கு இருதயம் பலவீனமாக இருப்பதன் காரணமாக அடிக்கடி இருதயப் படபடப்பு உண்டாகும்.இந்த சமயம் இருதயம் வேகமாகத் துடிக்கும்.இனம் தெரியாத ஒரு பயம் தோன்றும்.எதிலும் மனம் சொல்லாது.சில நிமிடங்களில் இந்த நிலை மாறிவிடும்.
சகய நிலை ஏற்ப்படும்.இதை உடனடியாகக் கவனித்து குணப்படித்திக் கொள்ள வேண்டும்.இதற்க்கு வெண் தாமரைப் பூ நல்ல குணம் கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.வெண் தாமரைப் பூவைக் கொண்டு வந்து,அதன் வெண்ணிறமான இதழ்களை ஆய்ந்து எடுத்து அவைகளை பொடியாக நறுக்கி,ஒரு சுத்தமான சட்டியில் போடவும்.
அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காச்சி இறக்கி,இதழ்களைப் பிழிந்து சாறு எடுத்து வடி கட்டி வைத்துக் கொண்டு,வல்லாரை இலையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்த உரலில் போட்டு இடித்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து மூன்று தேக்கரண்டியளவு சாற்றை இதில் விட்டுக் கலக்கி கொடுத்து விட வேண்டும்.இந்த மருந்தை தொடர்ந்து பன்னிரண்டு நாள்கள் வரை காலை மாலையாகக் கொடுத்து வந்தால் இருதயப் படபடப்பு பூரணமாகக் குணமாகும்.
வைத்தியம் தொடரும்.(உங்கள் கருத்துக்களை என் vignaraj@live.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
ஆதவன் உதித்ததால் வேட்டைக்காரன் மறைந்திட்டானா.
Monday, 2 November 2009






யோகாசனம் செய்யலாம் வாங்க.
Sunday, 1 November 2009
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும்
எளிதாக செய்யக் கூடிய ஆசனம் சூரிய நமஸ்காரம்.
கதிரோனைப் போற்றி வணங்கி அவனது அருளை,
ஆசிகளைப் பெறும் விதத்திலும், கதிரவனிடமிருந்து
சக்தியை இழுத்து வாங்கிக் கொள்ளும் விதத்திலும் அமைந்திருப்பதால்
சூர்ய நமஸ்காரம் என்று பெயர் வந்தது.
கதிரவனைத் தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில்
அவனுக்கு நன்றி கூறி சக்திகளைப் பெற்று கொள்ளும்
அடிப்படையில் இந்த ஆசனங்கள் அமைந்திருப்பதால்
இதை தமிழர்களின் ஆசனம் என்று கொள்ளலாம்.



முதல்படியாக இரு கைகளையும் அழகுறக் குவித்துக்
கும்பிடும் நிலையில் நிற்கவும்.
பிறகு நேரே கண்களைப் பார்க்கும்படி அமைக்கவும்.
மூச்சை உள்ளே நன்கு இழுத்து மார்பை மேலே ஏற்றி
(வயிற்றை யும் லேசாக மேலேற்றி) கும்பிடும் கைகளை மார்பை ஒட்டி வைத்துக் கொண்டு
அமைதியாக நிமிர்ந்து நிற்கவும்.
கைகளை உயர்த்தி உடலை முடிந்த அளவு பின்னால்
வளைக்கவும்
அடுத்து மூச்சை வெளியே விட்டவாறே உடலைக்
குனியச் செய்து, கைகளைக் கால்களுக்கு முன்பாக
தரையில் (உள்ளங்கை பதியுமாறு) வைக்கவும்.
முகம் லேசாக முழங்கால்களைத் தொட்டபடியும் இருக்கலாம்.
கைகளை அப்படியே (தரையில் வைத்த நிலையிலேயே)
இருத்தி, வலது காலின் முழங்காலை மட்டும் முன்னால்
மடக்கி, இடது காலை பின்னால் வளையாமல்
நன்கு நீட்டவும். பிறகு காலை நகர்த்தாமல்
மார்பை உயர்த்தி முதுகையும்,
கழுத்தையும் மூச்சை உள்ளுக்கிழுத்த வாறே
சற்று பின்புறமாக வளைத்திட வேண்டும்.
பார்வை நேராக இருக்கட்டும்.
வலது காலையும், இடதுக் காலையும் பின்னோக்கிக்
சேர்த்து நீட்டி (குதிகால் மேலே உயர்ந்து) கைளை
மட்டும் அப்படியே வைத்திருக்கவும்.
முகம் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது உடலின் மற்ற பாகங்கள் தரைக்கு
மேலே தூக்கி நிற்க, உள்ளங்கையையும்,
பாதங்களின் விரல்களும் மட்டுமே தரையைத்
தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு முக்கோண அமைப்பு வர வேண்டும்.
உடலின் பாரம் முழுவதும் கைகளின் மீது விழ வேண்டும்.
(அதற்காக முக்க வேண்டாம்) எந்த ஒரு பாகமும் வளையலாகாது (முட்டிகள் உள்பட)
இந்த ஆசன நிலை முழுவதும் மூச்சை
தம் கட்டி உள்ளேயே வைத்திருப்பது அவசியம்.

அடுத்தபடி முழங்கைகளையும், முழங்கால்களையும்
சற்றே கீழிறக்கிய நிலையில் பிருஷ்டப் பகுதி மட்டும்
தரையிலிருந்து மேலே தூக்கி நிற்கட்டும்.
உள்ளங்கை முதலில் மற்ற பாகங்கள் தரையைத்
லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும்.
இந்த நிலையில் மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.
ஏழாவது நிலையாக மூச்சை நன்கு உள்ளிழுத்தவாறே
தலையையும், மார்பையும் மேலே நிமிர்த்தவும்.
தலையை கூடிய வரை பின்னே வளைக்கவும்.
உடலின் கனத்தை உள்ளங்கைகளிலும்,
முழங்காலிலும் படும்படி அமைக்கவும்
அடுத்தபடி, கை கால்கள் முந்திய நிலையில் அப்படியே
இருத்தி வைத்து, பிருஷ்ட பாகத்தை மட்டும் முடிந்த
வரை மேலே உயர்த்திடுங்கள்.
அதை மேலே உயர்த்தும் போது, குதிகால்களை
நன்கு தரையில் அழுத்தி வைத்துக் கொள்க.
முக வாய்க்கட்டையை மார்பை ஒட்டி வைத்துக் கொள்க.
தலையை உட்புறமாகத் தொங்க விடுங்கள்.
முழங்கால்கள் (முட்டிகள்) சற்றும் வளையலாகாது.
இந்த நிலையில் மூச்சை வெளி விடாமல் தம் கட்டி
உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இரு நொடிகள் இந்நிலையில்
(முக்கோணம் போல) நிற்கவும்
அடுத்ததாக, இடது காலை மட்டும் முன் வைத்து
இரண்டு கைகளுக்கு நடுவில் தரையில் வைத்து விடுங்கள்.
வலதுக் காலை பின்னால் நன்கு (முட்டி மடியாமல்)
நீட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சி 9 நிலையிலும் மூச்சை தம் பிடித்து
உள்ளேயே மார்பு விம்ம (வெளியே விடாமல்)
வைத்திருக்க வேண்டும்.
அடுத்து வலது காலை இடது காலோடு சேர்த்து
ஒட்டியிருக்குமாறு வைத்து, பிருஷ்ட பாகத்தை மேலே
தூக்கி உள்ளங்கைகள் தரையில் பதிய குனிந்து நிற்க
வேண்டும். தலை உட்புறமாக குனிய வேண்டும்.
இந்த ஆசன நிலையும் 3-வது ஆசன நிலையும் ஒன்றேதான்.
இப்போது மூச்சை வெளியே விட்டு விட வேண்டும்.
படத்தில் காட்டியபடி, கைகளை மேலே உயர்த்திய
நிலையில் நின்று கொண்டு,
முடிந்த அளவுக்கு உடம்பை பின்னாலே வளைக்கவும்.
தலை நிமிர்ந்து நேராக மேலே பார்க்கட்டும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கலாம்.
பின்னர் நிமிர்ந்து வெளி விடலாம்.

கடைசியாக நின்ற நிலை அதாவது மூச்சை அமைதியாக
உள்ளுக்குள் இழுத்தவாறே இரண்டு கைகளையும்
கும்பிட்ட நிலையில் அழகுற நிற்கவும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ஓய்வு எடுக்கவும்.
இப்படி பன்னிரண்டு நிலைகளையும் வரிசை தவறாமல்,
தாறு மாறாக குனிந்து வளைந்து இடையில் ஓய்வெடுத்தல்
என்று முறையில்லாமல் செய்யக் கூடாது.
ஒழுங்காக செய்தால்தான் சூரிய நமஸ்காரத்தின் முழுப்
பயனும் கிட்டும்.
இதற்குள் ரத்த ஓட்டச் சுற்று இரண்டு மூன்று சீரான
நேர்ச் சுற்றுகள் சுற்றியிருக்கும்.
இதில் 12 நிலைகளுக்கும் மூச்சை உள்ளிழுக்கும்
முறைகள் முக்கியம்.
கவனித்து செய்யுங்கள்.

பலன்கள்:-
உடலின் எல்லாப் பாகங்களும், உள்ளூறுப்புக்களுமே
நல்ல பயன்களை எய்துகின்றன. இதன் சிறப்பு இப்போது விளங்குகின்றதா?
மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி
பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.
நாடிகளெல்லாம் பலமடைகின்றன.
அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து
உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப்
படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.
நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப்
பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி
ஒழுங்காகச் செயலாற்று கின்றன. ஒருவித நோயும்
மனிதனை அண்டவே அண்டாது.
சச்சின் பற்றிய சிறு பார்வை.
Tuesday, 25 August 2009
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைசிறந்தஇந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.
சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாகடெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்துஅணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்களுக்கு மேல் குவித்த வீரராவார்.
துடுப்பாட்ட வகை | வலதுகை | |
பந்துவீச்சு வகை | வலதுகைகை கால் சுழற்பந்து வலதுகைகை ஓவ் சுழற்பந்து வலதுகைகை கால் மந்தகதி | |
தேர்வு | ஒ.ப.து | |
---|---|---|
ஆட்டங்கள் | 146 | 413 |
ஓட்டங்கள் | 11,782 | 16,088 |
ஓட்ட சராசரி | 55.57 | 43.95 |
100கள்/50கள் | 39/49 | 41/87 |
அதிக ஓட்டங்கள் | 248* | 186* |
பந்துவீச்சுகள் | 3,330 | 7,709 |
இலக்குகள் | 42 | 154 |
பந்துவீச்சு சராசரி | 52.66 | 43.79 |
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 2 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | பொருந்தாது |
சிறந்த பந்துவீச்சு | 3/10 | 5/32 |
பிடிகள்/ ஸ்டம்பிங்குகள் | 85/0 | 120/0 |
“வாக்கிங்” போவதால் நன்மை தானா?
Sunday, 23 August 2009
உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது” தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.
அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும் விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் போன்றவை.
உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.
அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.
எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் , பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது.
இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியர் கேரி டோனோவன்.
தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.
எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.
கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !
கிரிக்கெட் சரவேடித் திருவிழா.


நகைச்சுவை
“எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”
“ரொம்ப நன்றி சார்.”
“இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா இந்த காசோலையில நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!”
“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”
“கடவுள்தான்.. “
“எப்படிச் சொல்றே?”
“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”


“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”
“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”
“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”
“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”
“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”
“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."
“நர்ஸ்.. ஆபரேஷன் முடிஞ்சி நான் கண் முழிச்ச உடனே என் மனைவியைப் பாக்கணும்.”
“கவலைப்படாதீங்க.. கடவுளையே நீங்க பாப்பீங்க!”
விஜய் டிவியில் "மாயாஜாலம்"
Saturday, 22 August 2009
|
